காலை நேர சங்கீதம்

அன்பின் நண்பர்களே !

எனது மூத்த மகள் இலண்டனில் குடும்பம் நடத்துவதைப் பார்த்த பின் எனது துணைவி எழுதிய கவிதை

கால்களில் சக்கரம் சுழலும் !

கைகளோ காற்றிலும் சீறும் !

அடுக்களையில் அவள் !

அடுத்தடுத்து என்ன வென்று

அலைபாயும் சிந்தனை !

கண்மணிகள் நாவற்பழமாய் !

தேன்வண்டாய் ரீங்காரம் !

சிந்தும் மழலையின் சிந்தனை !

சிறிய பூவோ சிட்டாய்ப் பறந்திடும் !

சின்னக் கால்களும் கைகளும்

சித்திரமாய் வளைந்திடும் !

“நாடி”யின் நாட்டம் நற்பண்பு  !

பார்த்துப் பார்த்து பயிலும் !

பாங்காய் அனைத்தும் சொல்லும் !

நாட்டம் எல்லாம் பள்ளிக்கோயிலிலே !

நாளும் ஓடும்  பெற்றோர்

நன்மழலை முகம் பார்த்து மகிழ்வர் !

அன்பு மகளோ அன்னை தந்தைக்கு

தலைமகள் ! நன்றாய் ஒன்றாய்

சிந்திக்கும் ! நடைமுறை எல்லாம்

தந்தையின் பயிற்சி !

அன்னையின் அன்பு

கண்டிப்பாய் கண்மணிகளைக் காக்கும் !

அன்புத்தலைவன் ஆற்றல் மேலும் சிறக்கவே

ஆனை முகனும் கருணை புரிவான்.

ஆடிப் பாடும் அகிலமே

அனைவர்க்கும் அரவணைப்பு !

சுற்றும் உலகில் நாமுமே

சுழலும் காற்றாய் இயங்கிடுவோம் !

இனிதே சிறகக் இல்லறம்

இறைவன் என்றும் அருள் புரிவான் !


” நாடி ” : மூத்த பேத்தியின் செல்லப் பெயர்

ஆக்கம் : செல்வி ஷங்கர்

Advertisements

குறிச்சொற்கள்: ,

7 பதில்கள் to “காலை நேர சங்கீதம்”

 1. cheenakay Says:

  சோதனை ,மறுமொழி

 2. வால்பையன் Says:

  நல்லாருக்கு சார்!

 3. ரங்கன் Says:

  அழகிய கவிதை சீனா.
  படிக்க இனிமை.. நாடியை கேட்டதாக சொல்..

  நன்றி,
  ரங்கன்

 4. ஆருத்ரா Says:

  கவிதையின் தலைப்பும் கவிதையும் மிக அருமை. நாடி – கேட்டிராத அன்புச் சொல்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: