காலை நேர சங்கீதம்

திசெம்பர் 1, 2009

அன்பின் நண்பர்களே !

எனது மூத்த மகள் இலண்டனில் குடும்பம் நடத்துவதைப் பார்த்த பின் எனது துணைவி எழுதிய கவிதை

கால்களில் சக்கரம் சுழலும் !

கைகளோ காற்றிலும் சீறும் !

அடுக்களையில் அவள் !

அடுத்தடுத்து என்ன வென்று

அலைபாயும் சிந்தனை !

கண்மணிகள் நாவற்பழமாய் !

தேன்வண்டாய் ரீங்காரம் !

சிந்தும் மழலையின் சிந்தனை !

சிறிய பூவோ சிட்டாய்ப் பறந்திடும் !

சின்னக் கால்களும் கைகளும்

சித்திரமாய் வளைந்திடும் !

“நாடி”யின் நாட்டம் நற்பண்பு  !

பார்த்துப் பார்த்து பயிலும் !

பாங்காய் அனைத்தும் சொல்லும் !

நாட்டம் எல்லாம் பள்ளிக்கோயிலிலே !

நாளும் ஓடும்  பெற்றோர்

நன்மழலை முகம் பார்த்து மகிழ்வர் !

அன்பு மகளோ அன்னை தந்தைக்கு

தலைமகள் ! நன்றாய் ஒன்றாய்

சிந்திக்கும் ! நடைமுறை எல்லாம்

தந்தையின் பயிற்சி !

அன்னையின் அன்பு

கண்டிப்பாய் கண்மணிகளைக் காக்கும் !

அன்புத்தலைவன் ஆற்றல் மேலும் சிறக்கவே

ஆனை முகனும் கருணை புரிவான்.

ஆடிப் பாடும் அகிலமே

அனைவர்க்கும் அரவணைப்பு !

சுற்றும் உலகில் நாமுமே

சுழலும் காற்றாய் இயங்கிடுவோம் !

இனிதே சிறகக் இல்லறம்

இறைவன் என்றும் அருள் புரிவான் !


” நாடி ” : மூத்த பேத்தியின் செல்லப் பெயர்

ஆக்கம் : செல்வி ஷங்கர்

பதிவர் திருவிழா புகைப்படங்கள்

செப்ரெம்பர் 1, 2012

பதிவர் திருவிழா புகைப்படங்கள்.

Hello world!

செப்ரெம்பர் 11, 2009

Welcome to WordPress.com. This is your first post. Edit or delete it and start blogging!